உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஸ்சாலே குறித்து முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில்வெளியிட்டது குற்றப்புலனாய்வு திணைக்களம்

2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயின் ஒரு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இடம்பெற்றதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான தகவல்களையும் சமர்ப்பித்துள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் மேலும் மூன்றுபேருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபரங்களை கொழும்பு கோட்டை நீதவான் பசந்தஅமரசேன முன்னிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்துள்ளனர்.

சுரேஸ்சாலே முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க நிசாந்த சொய்சா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்காக பயன்படுத்தியுள்ளனர்இஇது தவிர ஆசாத் மௌலானவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களையும் கவனத்தில் எடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 2024 ஒக்டோபர் 11ம் திகதி அருட்தந்தை சிரில்காமினி தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பமாகி தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விசாரணைகள் இ;;டம்பெறுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 28ம் திகதி கைதுசெய்யப்பட்ட சுரேஸ் சாலே விளக்கமறியலில் வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்படுகின்றார்அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நான்கு மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையால் விசாரணைகள் தாமதமாகின என நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த ஒக்டோபர் ஆறாம் திகதியே மீண்டும் விசாரணைகள் தங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சுரேஸ்சாலே ஆசாத்மௌலானா இருவரும் 2020 இல் அங்குனுகொலபலசவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக வெளியான தகவல்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura oct
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் - அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்கின்றார் அனுர
Gotabaya-Rajapaksa-L
பைபாஸ் சத்திர சிகிச்சைக்குப் பிறகு கோட்டாபயவிற்கு சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைகள்தேவைப்படுகின்றன- வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
wijeya son
விஜயதாசவின் மகனின் வாகனங்கள் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு
ABDUL
தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட அப்துல் -எல்சயத் முதல் முஸ்லீம் செனட்டராக வரலாற்றை படைத்தார்-
pstano15
இலங்கை அரசாங்கம் பாசிச அரசாக மாறப்போவதாக அச்சுறுத்துகின்றது -
Mujibur-Rahman-L
கொழும்பில் இடம்பெற்ற ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின்மாநாட்டிற்கு அரசாங்கம் 100 மில்லியனை வழங்கியதா?
canada usa
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள்: வரி நிவாரணம் பெறுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள கனடியர்களுக்கு இது ஒரு 'வெற்றி
parliment
50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சபாநாயகரைப் அரசாங்கம் ஏன் பாதுகாக்கிறது?
Gotabaya Rajapakasa
நவம்பர் 25-ல் தீர்ப்பு: வெளிநாட்டுப் பயணம் குறித்த தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் கோட்டாபய
gajendra
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படுகின்ற மூன்று சட்டங்களும் மிகமோசமானவை- கஜேந்திரகுமார்