இலங்கை தனது ஜனநாயக அமைப்புமுறைக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய அச்சுறுத்தலையும் சவாலையும் எதிர்கொண்டுள்ளது!
இலங்கை குடிமக்களாகிய நாங்கள் நாம் இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது கீழே உள்ள செய்தியை எழுத கையொப்பமிட்டவர்களைத் தூண்டியுள்ளது.
—–
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, ஜனதா விமுக்தி பெரமுன (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தன. இருப்பினும், ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, JVP/NPP அரசாங்கம் நமது அடிப்படை ஜனநாயகச் சுதந்திரங்களை வலுப்படுத்துவதாகக் கூறிய வாக்குறு மீறல்களுக்கு மத்தியிலும், பெருகிய முறையில் அதிகாரத்துவப் போக்குகளைக் காட்டியது. வாக்குறுதியளித்தபடி கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) திரும்பப் பெற அது மறுத்துவிட்டது.
மாறாக, PTA ஐ விட மிகவும் கொடூரமானதாகத் தோன்றும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த புதிய சட்டங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PSTA) மற்றும் organised crime act எனப்படும் குற்றத் தடுப்புச் சட்டம் (POCA) ஆகியவை அடங்கும். சந்தேக நபர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்க அனுமதிக்கின்ற விதிகளை இது கொண்டுள்ளமை உள்ளிட்ட காரணங்களுக்காக, POCA ஐ முழுமையாக வாபஸ் பெறுமாறு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அரசாங்கத்திற்கு அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த காலத்தில் சித்திரவதைகள், அட்டூழியங்கள் மற்றும் பொலிஸ் காவலில் தனிநபர்கள் கொல்லப்பட்டமை போன்றவைகளால் பொலிஸார் அவநம்பிக்கைக்கு உள்ளாகியுள்ள நிலையில், இலங்கையின் சிவில் சமூக இயக்கத்தின் பிரதிநிதிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR), சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப PSTA ஐ மீண்டும் திருத்தி வரைவு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகமும் (Human Rights Watch) PSTA மற்றும் POCA தொடர்பில் இதே போன்ற கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. PSTA ஆனது பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை, அதாவது சந்தேக நபர்களின் தன்னிச்சையான கைதுகள் குறித்த அறிக்கையிடலைக் கூடக் கட்டுப்படுத்துகின்ற அல்லது முழுமையாக அடக்குகின்ற விதிகளைக் கொண்டுள்ளது. இலங்கை குடிமக்களின் அடிப்படை ஜனநாயகச் சுதந்திரங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. இவை பாசிச ஆட்சிகளின் வழக்கமான பண்புகளாகும்!
பாசிசத்திற்கு எதிரான குடிமக்கள் (Citizens Against Fascism)
