மனித உரிமை அமைப்புகளால் வெளியிட்டுள்ள கரிசனைகளை தொடர்ந்து முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்களின் சர்ச்சைக்குரிய பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தடுத்துவைக்கும் காலத்தை 72 மணித்தியாலங்களில் இருந்து 48 மணித்தியாலங்களாக குறைக்கலாம்.
உத்தேச சட்டங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளோம்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தும் அடையாளங்கள் – உடைகள் பச்சை குத்துதல் தொடர்பான பிரிவுகளை மீள பரிசீலனை செய்யவும் மாற்றங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளது.
எனினும் இந்த நாடு குற்றக்கும்பல்கள் மற்றும் போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் ஆபத்தினை புறக்கணிக்க முடியாது,இலங்கை மக்கள் இன்று எதிர்கொள்ளும் பெரும் ஆபத்தாக போதைப்பொருள் காணப்படுகின்றது, என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்