உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (25) உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், குறித்த மேன்முறையீட்டு மனுவை விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மார்ச் 5 ஆம் திகதி மீண்டும்எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.