பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை செம்மஞ்சள் நிற ஆடையணிந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.
பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் ஒழிக்கவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த விடயத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செம்மஞ்சள் ஆடைகளில் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டனர்.
செம்மஞ்சள் நிறமானது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளற்ற பிரகாசமான எதிர்காலத்தை குறிப்பதுடன் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க  சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றார். இது பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் களைவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gotabaya-Rajapaksa-L
கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுவை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு