இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்

கொழும்பு, நவ. 25: இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும் எனத் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதார மீட்சி வலுவானதாகவும் நிலையானதாகவும் இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.

. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றையும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதையும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த வேளையில், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

“எங்களுக்குப் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நீண்ட மற்றும் மிகச் சிறப்பான வரலாறு உண்டு. நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும் அதன் பல்வேறு அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை முக்கிய அங்கங்களாகத் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், இராணுவத் தளவாடங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவையும் இதில் உள்ளடங்குவதாகக் கூறியுள்ளார். “விமானங்கள் முதல் கப்பல்கள் மற்றும் உலர் தளம் (Dry docks) வரை பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்
Gotabaya-Rajapaksa-L
கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுவை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு