போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்–சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது மனிதாபிமான உதவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போர் தொடர்பான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், பல தசாப்தங்களாக நிலவும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கைக்குப் பதிலளித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் ஸ்மிருதி சிங் (Smriti Singh), இலங்கையில் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்களைக் கையாள்வதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இலட்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் விருப்பமின்றி இருப்பதையே இந்த அறிக்கையின் முடிவுகள் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய அகழ்வுகளின் போது சிறுவர்கள் உட்பட 583 க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட புதைகுழிகள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையிலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இன்று உலகெங்கிலும் உள்ள மோதல்களில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் மாறியுள்ளதை ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்துவதாக ஸ்மிருதி சிங் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பொறுப்புக்கூறல் இன்மையும், தொடர்ச்சியான தண்டனை விலக்கும் ஏனைய நாடுகளில் சர்வதேச சட்டங்களை மீறுவோருக்கும் குற்றம் இழைப்போருக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிக்கையும், நீதி, உண்மை மற்றும் இழப்பீடுகளை வழங்குவதில் இலங்கையின் பல தசாப்த காலத் தோல்வியும், தொடர்ச்சியான சர்வதேச கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைப் பொறுப்புக்கூறல் திட்டத்தின் (OHCHR Sri Lanka Accountability Project) பணிகளைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளமன்னிப்புச் சபை , உலகளாவிய நியாயாதிக்கக் (Universal Jurisdiction) கொள்கைகள் உட்படப் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு இத்திட்டத்தின் வளங்களைப் பயன்படுத்துமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

‘நான் பலமுறை இறந்தேன்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள்’ (I Died Many Times: Attacks on Humanitarian Assistance in Sri Lanka, 20 Years On) எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஐ.நா. அறிக்கை, இலங்கையின் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அனைத்துத் தரப்பினராலும் மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டு மறுக்கப்பட்டமை குறித்து ஆராய்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 2021 ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் கீழ் இந்தப் பொறுப்புக்கூறல் திட்டம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை