இலங்கை பெரும் சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசஇலங்கைஇந்தியாவுடனான உறவுகளில் எதிர்காலத்தை மையமாக கொண்ட அணுகுமுறையை பின்பற்றவேண்டும் இரு தரப்பு உறவுகள் குறுகியசிந்தனையிலிருந்து நகரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச விவகாரங்களிற்கான இந்திய பேரவையில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச இலங்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இருதரப்பு உறவுகளை பரஸ்பரம் நன்மையளிப்பதாக பார்க்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இலங்கை உறவுகள் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படும் ஒரு அச்சுறுத்தலாக இல்லை என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை கொண்டிருக்கவேண்டிய வல்லரசு எனஇலங்கையின் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.