ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதிகள் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகளை முறியடிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல மாதங்களாக எடுத்திருந்த நிலையில் சீனாவின் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இது அமெரிக்க சீன பொருளாதார உறவில் ஏற்பட்ட விரிசலின் தாக்கம் குறித்த கவலைகளை உருவாக்கியுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவிலிருந்து வெளியேறும் ஏற்றுமதி கடந்த மாதம் 1.1 வீதம் வீழ்ச்சியடைந்தது.
இதுபெப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஏற்பட்ட மோசமான வீழ்ச்சியாகும்
செப்டம்பரில் 8.3வீதமாக காணப்பட்ட ஏற்றுமதி ஒக்டோபரில் வீழ்ச்சியடைந்துள்ளது.