மத்திய கிழக்கை சேர்ந்த மிகப்பெரிய மருத்துவ குழுமமான டொக்டர் சுலைமான் ஹபீப் மெடிகல் குழுமத்தினரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் இந்த குழுமத்தின் மருத்துவகட்டமைப்பை வெளிவிவகார அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
கொழும்பில் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பஅபிவிருத்தி நிலையம் இயங்குவதை சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் இலங்கையர்கள் இதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மருத்துவதுறையில் முதலீடு மற்றும் மருத்துவசுற்றுலா போன்றவை குறித்து அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.
சுகாதார துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் ஒரு முயற்சியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.