நாடாளவியரீதியில் தாதிமார் விரிவுரையாளர்களுக்கு உள்ள 175 வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ தாதிமார் கல்லூரி அதிபர் சங்கத்துடனான உரையாடலின் பின்னர் அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
இந்த சந்திப்பில் அவர் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
தற்போது 220 தாதிமார் விரிவுரையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தாதிமார் விரிவுரையாளர்களை பணியில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.