நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு 61890 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் . இது நவம்பர் மாதத்திற்கு மிகச்சிறப்பான ஆரம்பமாக அமைந்துள்ளது.
கடந்த வருடத்தின் ஒப்பிடும்போது இதேகாலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 13.2 வீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 54686 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

நாளாந்தம் 6877 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற நிலையில் இந்த மாதம் 203,259 பேர் விஜயம் மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
எனினும் நவம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 232176 சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை எட்டுவதற்கு இது போதாது நாளாந்த வருகை மேலும் அதிகரிக்கவேண்டும்.
நவம்பர் மாதத்தில் ரஸ்ய சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இ;ந்தியாவிலிருந்து 15541பேரும் (25.1) பேரும் ரஸ்யாவிலிருந்து 8220 பேரும் ஜேர்மனியிலிருந்து 4740 பேரும் இலங்கை வந்துள்ளனர்.