பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுழற்சி பொருளாதார நிகழ்ச்சியின் கீழ் காகிதாதி மறுசுழற்சி மூலம் “cash for trash” என்னும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அதன் முதற்கட்டமாக அலுவலக உத்தியோகத்தர்கள் 100 பேருக்கு துணியினாலான பை வழங்கி வைக்கப்பட்டது.


இக்கருத்திட்டத்தின் நோக்கமானது சுற்றுச்சூழல் தாக்கத்தினை குறைத்தல், வளங்களைப் பாதுகாத்தல்,ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி திட்டத்திற்கு உத்தியோகத்தர்களை சமூகப்பொறுப்புணர்வு முயற்சி உடையவர்களாக மாற்றுதல் போன்றவற்றின் மூலம் சூழல் நிலைத்தன்மை மையை பேணுதல் ஆகும்.
இந்நிகழ்வு பிரதேச செயலாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் உதவி பிரதேச செயலாளர்,பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.