உலகம் மாறிவிட்டதுசிறிய நாடுகள் பிராந்திய சந்தைகளைக் கைப்பற்ற முடிந்துள்ளது மேலும் அந்த சாதனையை அடைய இலங்கை உற்பத்தித்திறனை அதிகரித்து தொழில் 5.0 இன் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்கதெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் இயக்கத்தின் மூலம் வணிக சிறப்பை நோக்கி” மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எங்களால் இரண்டரை மணிநேர விமான பயணத்தின் மூலம் 3.4 மில்லியன் மக்களை அடையமுடியும் இந்தியாவோ மத்திய கிழக்கோ கிழக்காசியாவோ ஆபிரிக்காவோ
. இந்த 3.4 பில்லியன் மக்கள்தொகையை ஊடுருவிச் செல்வதே எங்கள் முழு திட்டமாக இருக்க வேண்டும் அதற்காக நாங்கள் விரும்பும்டொலர்களை எங்களுக்குத் தரக்கூடிய புதுமையான உற்பத்தி மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்
300 பில்லியன் அமெரிக்கடொலர் பொருளாதாரத்தை நோக்கி தொழில்துறை
அமைச்சு
பயணித்து வருகிறது. இது எளிதான காரியமல்ல. எங்களிடம் 100 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரம் மட்டுமே உள்ளது. இதை மூன்று மடங்காக உயர்த்த விரும்புகிறோம்”
. உள்ளூர் தொழில்கள் 10 வீதவளர்ச்சியடைந்தால் இலக்கை அடைய முடியும்
உற்பத்தித்திறன் செயலகத்தின் தேசிய தரவுத்தளத்தில் உள்ளூர் நிறுவனங்கள் பதிவு செய்து அடுத்த கட்டத்திற்கு செல்ல விருப்பம் தெரிவிக்க வேண்டும்
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு நிறுவனத்தையும் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் கைகோர்த்து செயல்படும்