இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ணவே எனது பிள்ளையின் தந்தை எனினும் அவர் அதனை ஏற்க மறுக்கின்றார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்த பின்னர் அவர் ஊடகங்களிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் இன்று விசாரணையை மேற்கொண்டவேளை சாமிகருணாரட்ண உடல்நலவுக்குறை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சாமிகவே எனது பிள்ளைக்கு தந்தை,ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்,இதனை தொடர்ந்து தந்தை யார் என்பதை உறுதிப்படுத்தும் சோதனையை கோரி நான் நீதிமன்றம் வரவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராவாரா என்பது எனக்கு தெரியாது. என தெரிவித்துள்ள அவர் நான் கர்ப்பிணியாகயிருந்தவேளை அவர் பெண்கள் சிறுவர் பணியகத்தில் எனது நேரத்தை வீணடித்தார் தற்போது எனது பிள்ளைக்கு இரண்டு வயது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிள்ளை இலங்கையில் வாழவேண்டும் அவர்தான் அதன் தந்தை என்பது எனக்கு தெரியும் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.