வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல!! என் வெற்றிக்கு என் தாயார் அளித்த ஒரு அறிவுரையே காரணம் –ஸ்ரீதர் வேம்பு

தற்போது இந்த உலகம் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டது அனைவரும் எதையோ ஒன்றை நோக்கி பிசியாக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள் . குறிப்பாக தற்போதுள்ள இளைஞர்களுக்கு படிப்பை முடித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை பெற வேண்டும் , வேலையின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேற வேண்டும் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் இல்லை என்றால் தங்களுக்கு என சுயமாக ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் அனைவருமே தற்போது வேலைக்கு செல்லக்கூடிய சூழல் என்பது உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் தான் தற்போதுள்ள இளைஞர்களுக்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர் வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல எனக் கூறியிருக்கிறார் . வாழ்க்கையை ஒரு பந்தயமாக நான் நினைத்திருந்தால் மெடா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்குடன் ஒப்பிடும் போது நான் தோல்வி அடைந்தவன் என கூறியுள்ளார்.

மார்க் என்னை விட 20 ஆண்டுகள் இளமையானவர், அவருடன் நான் என்னை ஒப்பிட்டால் நான் தோல்வி அடைந்தவன், ஆனால் நான் அதை செய்ய வில்லை ஏனெனில் வாழ்க்கை ஒரு பந்தயம் அல்ல என என் தாயார் எனக்கு கூறிய அறிவுரையை நான் இங்கே நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். எந்த வயதிலும் நாம் சிறப்பாக செயல்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன 30 வயது என்பது பலருக்கும் ஒரு புதிய தொடக்கம் என தெரிவித்திருக்கிறார் . மார்க்குடன் ஒப்பிட்டு பார்த்து நான் தோல்வி அடைந்தவன் என நான் தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பதில்லை எனக் கூறுகிறார்.

வாழ்க்கை குறித்த இந்த புரிதலுக்கும் , தெளிவான கண்ணோட்டத்திற்கும் காரணம் என்னுடைய தாய் தான் என அவர் தெரிவித்திருக்கிறார். அண்மையில் ராம்சரணின் மனைவியும் அப்பல்லோ ஹாஸ்பிடல் நிறுவனத்தின் மூத்த தலைவருமான உபாசனா, தன்னுடைய எகஸ் பக்கத்தில் ஐஐடி ஹைதராபாத்தில் மாணவர்களை சந்தித்து பேசினேன் அவர்களிடம் எத்தனை பேர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு மாணவிகளை விட பல மாணவர்கள் கை உயர்த்தினார்கள், மாணவிகள் பலரும் வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் முக்கியத்துவம் தருகிறார்கள் இதுதான் புதிய இந்தியா என இது வரவேற்கத்தக்க மாற்றம் என கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்து இருந்த ஸ்ரீதர் வேம்பு தற்போதுள்ள இளம் தொழில் முனைவோருக்கு எல்லாம் நான் கூறுவது இருபதுகளிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் அதை தள்ளி போடாதீர்கள் என்பது தான் என தெரிவித்திருந்தார் . இந்த சமூகத்திற்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமை அது எனக்கூறி இருந்த அவர் இது பழங்கால ஐடியாவாக தோன்றலாம் ஆனால் இதை நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பேன் என தெரிவித்திருக்கிறார் .வருடைய இந்த பதிவுக்கு பலரும் எதிர்வினை ஆற்றி இருந்தனர் ஒரு பெண் இருபதுகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் என்னுடைய வேலையை நான் அதற்காக இழக்க வேண்டி இருக்கிறது அதனால் என்னுடைய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி இருக்கிறார் அதற்கு பதில் அளித்த ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை ஒரு பந்தயமாக பார்க்க கூடாது என விளக்கம் தந்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு