17 வருடங்களாக தலையநகரில் இயங்கி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனம் 23 நவம்பர் 2025 மாலை 2 மணி முதல் BMICH – Lotus மண்டபத்தில் மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

இதில் சுமார் 200 மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். Diploma, HND, Degree, Mastersஆகிய படிப்புகளில் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். Psychology, Business Management, IT, English, Teacher Training போன்ற துறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் பல்கலைக்கழக மானிய ஆணைகுழுவின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் Kshanika Hirimburegama கலந்துகொண்டார்

மேலும், மாண்புமிகு விருந்தினர்களாக
Mr. Khairul Iskandar Md. Yusof (Counselor, High Commission of Malaysia) மற்றும் Mr. Ali Shareef (Counselor, High Commission of Maldives) கலந்து சிறப்பித்தனர்

Amazon உயர்கல்வி நிறுவனம் சுமார் 17 வருடங்களாக உயர்கல்வி துறையில் பல ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கி, பல்வேறு சேவைகளிலும் முன்னணி வகித்து வளர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 6 விருதுகளை பெற்றுள்ளது. Amazon நிறுவனம் பம்பலப்பிட்டி காலிவீதியில், நான்கு மாடி கட்டடத்தில், அதிநவீன வசதிகளுடன் இயங்கி, கல்வித் துறையில் பல சேவைகளை வழங்கி வருகிறது.

“ சிறந்த முறையில் தரமான கல்வியை வழங்கி வளர்ந்து வரும் நிறுவனம் ” என இந்நிறுவனத்தின் நிரைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிகார் தெரிவித்தார்.