பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது- “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்”பிரதமர் ஹரினி

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் இன்று (24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் பிரதமர் ) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் செம்மஞ்சள் நிறம் அல்லது செம்மஞ்சள் நிறம் கலந்த ஆடைகளை இன்றைய தினம் அணிந்து வந்திருந்தனர்.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கும் அடையாள இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.

அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் ஒன்றியத்தினால் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் இலச்சினைகள் அணிவிக்கப்பட்டன.
16 நாட்கள் வேலைத்திட்டம் என்பது பால்நிலைசார் வன்முறைக்கு (GBV) எதிராக வருடாந்தம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடத்தப்படும் ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். இது பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் தொடங்கி மனித உரிமைகள் தினத்தன்று முடிவடைகிறது. உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கவும், அகற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நடவடிக்கைகளை பலப்படுத்துவதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அவர்களின் 16 நாட்கள் வேலைத்திட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருள், “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்பதை வலியுறுத்துகிறது.

இதனுடன் இணைந்ததாக, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒரு விசேட ஊடகச் சந்திப்பும் நடத்தப்பட்டது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமர் ஹரினி அமரசூரிய இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், சட்டக் கொள்கைகளை உருவாக்குவதைத் தாண்டி, பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பொறுப்பும் கவனமும் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது ஒரு சாதகமான நிலைமையாகும் என்றும், பால்நிலைசார் வன்முறையை ஒழிப்பதைச் சமூகமயமாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்