உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவர் பிரிட்டனில் புகலிடம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புபட்டவர் என இலங்கையில் கைதுசெய்யப்பட்ட நபரே தற்பொது பிரிட்டனில் புகலிடம் பெற முயல்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தாய் இரண்டு பிள்ளைகள் உட்பட பிரிட்டனை சேர்ந்த ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இந்த நபர் 2022 இல் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.
2022 செப்டம்பரில் பிரிட்டன் சென்றுள்ள அந்த நபர் ஒருமாதத்தின் பின்னர் அங்கு புகலிடம் பெற முயன்றுள்ளார். நான் இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் பொலிஸார் எனது வீட்டிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், நான் மீண்டும் இலங்கை சென்றால் துன்புறுத்தலிற்குள்ளாவேன் என அச்சமடைகின்றேன் என பிரிட்டன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் தனக்கும் தனது மனைவிக்கும் லண்டனில் புகலிடம்பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை ஆரம்பத்தில் அதிகாரிகள் நிராகரித்த போதிலும் அவர் தனக்கு எதிரான தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து வெற்றிபெற்றுள்ளார். இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.