யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பிற்பகல் முதல் மழை அதிகரிக்கும். இன்று இரவும் கனமழை தொடர்ச்சியாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான தயார்ப்படுத்தலோடும் எச்சரிக்கையோடும் இருப்பது அவசியம். -நாகமுத்து பிரதீபராஜா –

28.11.2025 வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணி
டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இது நாளை(29.11.2025) நண்பகலுடன் இலங்கையை குறிப்பாக வடக்கு மாகாணத்தை விட்டு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வட மேற்கு, கிழக்கின் சிலபகுதிகள், மேற்கு மத்திய மாகாணங்களுக்கு கிடைத்து வரும் கன மழை நாளை காலை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு அதிக ஈரப்பதன் மிக்க மழை மேகங்கள் குவிக்கப்படுகின்றன. ஆகவே வடக்கு மாகாணத்திற்கு தொடர்ச்சியாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று மாலை முதல் காற்றும் வேகமாக வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஏற்கனவே மிகக்கனமழை கிடைத்துள்ளது. தற்போதும் கன மழை கிடைத்து வருகின்றது. பல குளங்கள் வான் பாய்கின்றன. பல குளங்களுக்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் அருவியாற்றின்( மல்வத்து ஓயா) கீழ்ப்பகுதிகளுக்கு அதிக நீர் வரத்து தொடர்ந்தும் இருக்கும். ஏனெனில் அதன் நீரேந்து பிரதேசங்களில் கன மழை கிடைத்து வருகிறது. எனவே வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பிற்பகல் முதல் மழை அதிகரிக்கும். இன்று இரவும் கனமழை தொடர்ச்சியாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான தயார்ப்படுத்தலோடும் எச்சரிக்கையோடும் இருப்பது அவசியம்.
கிழக்கு மாகாணத்திற்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும். எனினும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு இன்று மாலை முதல் மழை படிப்படியாக குறைவடையும். ஆனால் ஆறுகளின் நீர் வரத்து தொடர்ந்தும் இருக்கும்.
நாளை பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாடு முழுவதும் இந்த அதி தீவிர வானிலை நிலைமை படிப்படியாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு