ராஜங்கனையில்மழைவெள்ளத்தில் சிக்கிய யாழ்ப்பாண பேருந்திலிருந்து 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து நேற்று ராஜங்கனையில் வெள்ளத்தில் சிக்கியது.இதனை தொடர்ந்து பெல் 212 ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்தி பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன.
எனினும் மோசமான காலநிலை காரணமாக ஹெலிக்கொப்டரால் பேருந்தை கண்டுபிடிக்க முடியாததால் கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 20க்கும் அதிகமான பயணிகளை மீட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பயணிகளை மீட்க்கும் நடவடி க்கைகள் தொடர்கின்றன.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக நேற்று இரவு விமானப்படை தலைமையகம் சென்றார்.
அனுராதபுரம் புத்தளம் வீதியில் உள்ள கலாஓயா பகுதியில் மழை வெள்ளத்தில் பேருந்து சிக்குண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு மீட்பு முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து இவர்கள் வீடொன்றின் கூரைமீது ஏறி அமர்ந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து இன்று காலை கடற்படையினர் அவர்களை மீட்பதற்காக விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர்
