தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட தூதுவரும்இ வெள்ளை மாளிகை ஜனாதிபதிப் பணியாளர் அலுவலகத்தின் ) பணிப்பாளருமான செர்ஜியோ கோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
தொலைபேசி உரையாடலின் போது ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஆதரவை வழங்கியதற்காக ஜனாதிபதி அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.
“விசேட தூதுவர் செர்ஜியோ கோர் இன்று காலை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் உரையாடினார். நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று இலட்சக்கணக்கானவர்களை இடம்பெயரச் செய்த சூறாவளி ‘திட்வா’வைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஆதரவை வழங்கியமைக்காக அவர் ஐக்கிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்கா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறது” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகம்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
