மினிப்பேயின் தொலைதூர மலைகளில் இருந்து ஒரு சோகமான தகவல் வெளிவந்துள்ளது. அங்கு உடவத்த நெலும் மல் கிராமம் நவம்பர் 27 அன்று ஒரு பேரழிவுகரமான மண்சரிவால் பாதிக்கப்பட்டது.
சேதத்தின் அளவு அதிர்ச்சியளிக்கிறது: கிராமத்தில் இருந்த 16 வீடுகளில் 12 முழுவதுமாக அழிந்து போயின குடும்பங்கள் டன் கணக்கிலான மண்ணுக்கு அடியில் புதைந்தன.
பல நாட்களாக இந்தக் கிராமம் வெளி உலகிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. திடீர் வெள்ளமும்இ தொடர்ச்சியான மண்சரிவுகளும் இராணுவ மீட்புக் குழுக்கள் கூட அந்தப் பகுதியை அடைய முடியாத நிலையை உருவாக்கின.
இன்று காலை ஒரு கடினமான பயணத்திற்குப் பிறகு அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்து மனதை நொறுக்கும் அதன் பின்னணியை வெளிப்படுத்தினர்.
அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் இதுவரை இடிபாடுகளிலிருந்து 22 சடலங்களை மீட்டுள்ளனர்.
அனர்த்தம் ஏற்பட்ட நேரத்தில் சுமார் 30 பேர் கிராமத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண்பதற்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மீட்புக் குழுவினர் ஆபத்தான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலைக்கு மத்தியில் தங்கள் தேடலைத் தொடர்கின்றனர்.