நாடு அனர்த்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஜனாதிபதியை அவதூறுசெய்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பிரதிபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில்வட்டகல உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவசரகாலசட்ட விதிமுறைகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பேரிடர் சூழ்நிலையின் போது அவதூறு செய்யும் தவறான தகவல்களை பரப்புவது குற்றமாகும் என தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி மிகமோசமாக தாக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுங்கள் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சில நாட்களிற்கு முன்னர் ஆற்றிய உரையில் ஜனாதிபதி அவசரகால சட்டத்தினை அனர்த்த பாதிப்பு நடவடிக்கைகளிற்காகவே பயன்படுத்வோம் என தெரிவித்திருந்தார்