ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா?

உலக அளவில் ஸ்மார்ட் போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது ஆப்பிள் நிறுவனம் . ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஒவ்வொரு முறை ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது எல்லாம் இளைஞர்கள் மத்தியில் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும். ஏனெனில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே ப்ரீமியமான அனுபவத்தை தரக்கூடியவை . இந்த ஏஐ தொழில்நுட்ப காலத்தில் ஆப்பிள் நிறுவனம் அடுத்தடுத்து தன்னுடைய தொழில் உத்திகளை மாற்றிய வண்ணம் இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா?
குறிப்பாக இந்தியா உள்ளிட்ட சந்தைகளில் பெரிய அளவில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய கிளைகளை பரப்பி வருகிறது. இந்த சூழலில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு துறையின் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமர் சுப்பிரமணியா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த பதவியில் இருக்கும் ஜான் கியானாண்ட்ரியா விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இதனை அடுத்து அந்த பதவிக்கு அமர் சுப்ரமணியனை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது.

 

அமர் சுப்பிரமணியா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பல்வேறு முன்னணி டெக் நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் பெற்றவர் . மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏஐ பிரிவுக்கு துணைத்தலைவராக பதவி வகித்து வந்தவர் . அதற்கு முன்னதாக கூகுள் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் வேலை செய்தவர். கூகுள் டிஜிட்டல் துறையில் பொறியியல் பிரிவின் தலைவராக இவர் செயல்பட்டு வந்திருக்கிறார் .

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெசின் லேர்னிங் துறைகளில் அனுபவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்படுகிறார் . இவர் 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தான் பொறியியல் பட்டத்தை முடித்திருக்கிறார். வாஷிங்டனில் பிஎச்டி முடித்த பிறகு முதன்முதலில் அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக தான் இவர் வேலைக்கு சேர்ந்தார். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்த அவர் ஒரே ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் .அங்கிருந்து பின்னர் கூகுள் நிறுவனத்திற்கு சென்றார்.

ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் ஏஐ முக்கியமான இடத்தில் இருக்கிறது. அந்த பிரிவுக்கு தலைவராக அமர் சுப்ரமணியாவை நியமிப்பதில் மகிழ்ச்சி என்றும் அவருடைய அசாதாரணமான ஏஐ நிபுணத்துவத்தை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த போகிறது என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்