முறையான திட்டமிடலின்றிய வீதிச்சீரமைப்பால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தண்ணிமுறிப்பு விவசாயிகள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முறையான திட்டமிடல் இன்றிய வீதிச்சீரமைப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துநெருக்கடியால், வயல்காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல்நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாக முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விவசாயிகள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசாரவிகரன் அவ்வீதியில் பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்காக வீதி வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களால் இதன்போது முறையிடப்பட்டது.
இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவ்வீதிகள் பாரிய அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன.அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.


இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு நீர்ப்பாசனக்குளத்தின் கீழான சுமார் 3000ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களுக்குச் செல்லும் பாதைகளில் முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட வீதிச் சீரமைப்புப்பணிகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாயநிலங்களுக்குச் செல்லும் வீதி அபிவித்தித் திணைக்களத்திற்குரிய வீதியில் முறையான திட்டமிடலின்றியவகையிலும், பொருத்தமற்ற காலப்பகுதியிலும் பல பாலங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.

அதேபோல் தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்குச்செல்லும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய வீதியிலும் முறையான திட்டமிடலின்றி, பொருத்தமற்ற காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாலம் அமைக்கு வேலைத்திட்டமும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது. இவ்வாறாக அவ்வீதியில் பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்காக வீதி வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களால் இதன்போது முறையிடப்பட்டது.
இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவ்வீதிகள் பாரிய அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன.


இதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். குறிப்பாக வயல் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், வயலுக்கான உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன், இதுதொடர்பில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நிலமைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளின் போக்குவரத்து இடர்பாடுகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு வயல்நிலங்களுக்குச் செல்லும் வீதிப்போக்குவரத்தை தற்காலிகமாக சீர்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை