கோவா இரவுவிடுதியில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு

பஞ்சிம்: வடக்கு கோவாவில் உள்ள அப்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலங்களில் ஒன்று கோவா. அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் போர்ச்சுகல் பாரம்பரிய கட்டிடங்கள் கோட்டைகள் தேவாலயங்கள் மற்றும் இயற்கை எழிலுடன் கூடிய பல்வேறு கடற்கரை பகுதிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவது வழக்கம்.

இந்த கடற்கரையோர பகுதிகளில் தங்கும் விடுதிகள் இரவு நேர கேளிக்கை விடுதிகள் அதிகம் அமைந்துள்ளன. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சீசன் டைம் என உள்ளூர் மக்கள் சொல்வதுண்டு. கிறிஸ்துமஸ் புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நாட்கள் இதில் அடங்கும்.

இந்நிலையில் சனிக்கிழமை (டிச.6) நள்ளிரவு வடக்கு கோவாவின் அப்போரா பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களில் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என்றும்இ மற்றவர்கள் விடுதியின் சமையலறையில் பணியில் இருந்தவர்கள் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த விடுதியில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை தணிக்கை செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபா வலியுறுத்தி உள்ளார்.

 

 

.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு