இலங்கையின் அவசரநிதியுதவி கோரிக்கைக்கு முன்னுரிமை – சர்வதேச நாணயநிதியம்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அவசர உதவிக்கான கோரிக்கை, அதாவது விரைவு நிதியுதவிக் கருவி (RFI), தற்போது அந்நிறுவனத்தின் உயர் முன்னுரிமையாக உள்ளது. இதன்மூலம் இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிதி உதவி கிடைக்கவுள்ளது.

சமீரத்தி்ல் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியின் பேரழிவுகரமான தாக்கத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மீட்பு முயற்சிகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

இலங்கையின் RFI கோரிக்கையை வாரியத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது இந்த நேரத்தில் முதன்மை முன்னுரிமை என்று இன்று (7) சர்வதேச நாணய நிதிய பேச்சார் உறுதிப்படுத்தினார். இது நாட்டின் உடனடித் தேவைகளுக்கு அவசர ஆதரவை வழங்குவதற்கான சமிக்ஞையாகும்.

இந்த RFI உதவி, இலங்கையின் தற்போதைய நீட்டிக்கப்பட்ட நிதியுதவி வசதி (EFF) திட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்படும். EFF திட்டம் நாட்டின் பொருளாதார நிலைப்படுத்துதல் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அடிப்படையாகத் தொடர்கிறது.

IMF பேச்சாளர் தெரிவித்ததாவது: “இலங்கை அதிகாரிகளின் அவசரகால நிதியுதவிக் கோரிக்கையின் வெளிச்சத்தில், விரைவு நிதியுதவிக் கருவி (RFI) கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் பரிசீலிப்பது தற்போதைய நிலையில் முதன்மை முன்னுரிமையாக உள்ளது. நீட்டிக்கப்பட்ட நிதியுதவி வசதியின் (EFF) ஐந்தாவது மறுஆய்வை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக, IMF குழு ஒன்று 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும். RFI-இன் கீழ் வழங்கப்படும் ஆதரவு, இலங்கையின் EFF அணுகலுடன் கூடுதலாக இருக்கும்.”

‘தித்வா’ சூறாவளியின் பேரழிவுகரமான தாக்கத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்குத் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதுடன், அவசரகால நிதி உதவியின் கோரிக்கை தற்போது ஆய்வில் உள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் எவன் பாப்பஜோர்ஜியு (Evan Papageorgiou), வெள்ளிக்கிழமை (5) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அழிவின் அளவை ஒப்புக்கொண்டதுடன், இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் உறுதியளித்தார்.

“பேரழிவை ஏற்படுத்திய ‘தித்வா’ சூறாவளியின் தாக்கத்தாலும், பரவலான அழிவாலும் ஆழமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பாப்பஜோர்ஜியு கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை