வெப்பமடையும் கடல்கள் தீவிரமடைந்த மழைப்பொழிவு மற்றும் பிராந்திய-குறிப்பிட்ட பாதிப்புகள் ஆகியவற்றின் கலவையே கடந்த மாதம் இந்தோனேசியா மற்றும் இலங்கையைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்குகாரணம் சர்வதேச காலநிலை ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை-

BANGKOK

 

வெப்பமடையும் கடல்கள் தீவிரமடைந்த மழைப்பொழிவு மற்றும் பிராந்திய-குறிப்பிட்ட பாதிப்புகள் ஆகியவற்றின் கலவையே கடந்த மாதம் இந்தோனேசியா மற்றும் இலங்கையைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பங்களித்தது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வெள்ளத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இரண்டு வெப்பமண்டல புயல்கள் இந்த இரண்டு நாடுகளிலும் அசாதாரண மழையைக் கொண்டுவந்தன இதனால் நிலச்சரிவுகள் மற்றும் பரவலான வெள்ளம் ஏற்பட்டு இலங்கையில் 600-க்கும் மேற்பட்டவர்களும் இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 1000 பேரும் உயிரிழந்தனர்.
சர்வதேச காலநிலை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட துரித ஆய்வின் மூலம் பலவிடயங்கள் ஒன்றிணைந்து இயற்கை அனர்த்தத்தின் தாக்கத்தை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது..

இந்த ஆய்வு இந்த இயற்கை பேரழிவிற்கான காரணங்களாகஉலக வெப்பமயமாதலுடன் தொடர்புடைய கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் உயர்வு மற்றும் கனமான மழைப்பொழிவு அத்துடன் லா நினா (LA NINA) மற்றும் இந்தியப் பெருங்கடல் இருதுருவம் (INDIAN OCEAN DIPOLE) போன்ற இயற்கையான காலநிலை வடிவங்களையும் குறிப்பிட்டுள்ளது.

பிராந்திய வானிலை அமைப்புகளின் சிக்கலான தன்மை காரணமாக காலநிலை மாற்றத்தின் துல்லியமான செல்வாக்கை அவர்களது மாதிரிகள் முழுமையாகத் தனிமைப்படுத்த முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் நீண்ட காலப் போக்குகள் சமீபத்திய தசாப்தங்களில் தீவிர மழை நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்துள்ளன என்பதைக் குறிக்கிறது.

மலாக்கா நீரிணைப் பிராந்தியத்தில் உலக வெப்பநிலை அதிகரித்ததால் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கனமழை நிகழ்வுகளின் இந்த அவதானிக்கப்பட்ட வலுவடைதல் இன்னும் அதிகமாகத் தெரிகிறது. வனங்கள் அழிக்கப்படுதல் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் மக்கள் அடர்த்தி மற்றும் பருவமழைக் காலத்துடன் ஒத்துப்போகுதல் போன்ற காரணிகள் அதன் தாக்கங்களை மேலும் மோசமாக்கியுள்ளன என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

இந்த இரண்டு நாடுகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தின் அளவு அரிதானது என்றும் வெப்பமடையும் உலகில் வானிலை உச்சநிலைகளின் அதிகரித்து வரும் தீவிரத்தையே இது பிரதிபலிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை