இலங்கையின்புகையிரத அமைப்பில் தற்போது மூன்றில் ஒரு பங்குமட்டுமே இயங்கக்கூடிய நிலையில் உள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பேரிடரினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவர் பின்வரும் விவரங்களை வழங்கினார்:
பொதுவான பாதிப்பு: “அரசாங்க திணைக்களங்களில் புகையிரததிணைக்களமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எமது முழுமையான அமைப்பில் சுமார் 1ஃ3 பகுதியை மட்டுமே எம்மால் தற்போது பயன்படுத்த முடிகிறது.”
மண்சரிவு மற்றும் பாறை வீழ்ச்சி: ரயில் தண்டவாளங்களில் 91 இடங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பாலங்கள் மற்றும் மதகுகள்: 73 பெரிய பாலங்களும் 38 சிறிய மதகுகளும்சேதமடைந்துள்ளன.
தடைகள்: 149 இடங்களில் தண்டவாளங்களின் மீது மரங்கள் அல்லது கிளைகள் விழுந்துள்ளன. மேலும் 177 இடங்களில் ஏனைய வழிகளில் சேதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டுள்ளன.
ரயில் நிலையங்கள்: மொத்தம் 27 ரயில் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.