வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களின் உண்மை நிலையை நேரில் கண்டு உணர்ந்து, அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களின் உண்மை நிலையை நேரில் கண்டு உணர்ந்து, அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது ஆளுநர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களை என்னுடன் களப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதன் பிரதான நோக்கம், அம்மக்களின் வாழ்வியல் சவால்களை அதிகாரிகள் நேரில் கண்டு, அவர்களுக்கான சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதலுடன் காத்திரமான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே ஆகும். எனவே, மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளைத் தவறாது நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டங்கள் அமைய வேண்டும்.
பல்வேறு மருத்துவமனைகளில் நிலவும் சிறிய குறைபாடுகள் தொடர்பில் பல கோரிக்கைகள் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை உடனடித் தேவையாகக் கருதி நிவர்த்தி செய்ய வேண்டும். அதேவேளை, கடந்த காலங்களில் கட்டப்பட்ட பல அரச கட்டடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. எனவே, புதிதாகக் கட்டடங்களை அமைத்து நிதியை விரயமாக்குவதை விடுத்து, பயன்பாடற்றுக் கிடக்கும் கட்டடங்கள் வேறு திணைக்களங்களுக்கு உரியதாக இருந்தாலும், அவற்றைப் பெற்று வினைத்திறனாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆளுநர் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களில் பிரதேச மருத்துவமனைகளின் அபிவிருத்திகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த கால பேரிடர்களின் போது மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்டதையும், தொடர்பாடல் துண்டிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், இச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு செய்மதித் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, அனலைதீவு பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையான நோயாளர் காவு வண்டிப் படகுக்குரிய அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் வெளியிட்டார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் 2026ஆம் ஆண்டுக்காகத் திணைக்கள ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் உத்தேச திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
சுகாதாரச் சேவைகள் திணைக்களம்: 1071 மில்லியன் ரூபா
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்: 264 மில்லியன் ரூபா
சுதேச வைத்தியத் துறை திணைக்களம்: 226 மில்லியன் ரூபா
மேற்படி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள காத்திரமான திட்டங்கள் குறித்து துறைசார் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்