ஒரு நம்பிக்கைக்குரிய பங்காளியாகவும் நம்பகமான நண்பனாகவும் இந்தியா அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.-மோடி அனுரகுமாரதிசநாயக்கவுக்கு கடிதம்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் விரிவான உதவித் தொகுப்பு குறித்து விவாதிக்க வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் விசேட தூதுவராக அனுப்பப்பட்டுள்ளதை இக்கடிதம் உறுதிப்படுத்துகிறது.

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள், இலங்கை  ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்கவுக்கு   எழுதிய விசேட கடிதம்:

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து உங்கள் நாடு மீண்டு வரும் வேளையில், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா இலங்கையுடன் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்து விவாதிப்பதற்காக எனது விசேட தூதுவராக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களை நான் அனுப்பி வைக்கிறேன்.

எமது ‘அண்டை நாட்டுக்கே முதலிடம்’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘முதலில் பதிலளிப்பவர்’ (First Responder) என்ற உறுதிப்பாட்டிற்கு இணங்க, உடனடி சவால்களை எதிர்கொள்ள ‘ஆபரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) திட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். இந்தியக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசர கால உபகரணங்களைக் கொண்டு வந்தன. உங்கள் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அவை ஆதரவளித்தன. அதே வேளையில் மருத்துவ அவசரநிலைகளைக் கையாள்வதற்கும், முக்கியமான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கும் இந்தியாவின் சிறப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ‘ஆபரேஷன் சாகர் பந்து’ இலங்கையில் பலரது வாழ்க்கையைத் தொட்டதுடன், நமது ஆழமான பிணைப்பின் வெளிப்பாடாகப் பரவலாகக் கருதப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இலங்கை இப்போது அடுத்த கட்டத்தை நோக்கித் தனது கவனத்தைச் செலுத்தும் வேளையில், ஒரு நம்பிக்கைக்குரிய பங்காளியாகவும், நம்பகமான நண்பனாகவும் இந்தியா அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். கடந்த காலத்தைப் போலவே, இலங்கையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும், மீளெழுச்சியை உறுதிப்படுத்துவதிலும் நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்.

இந்தச் சூழலில், இந்தியா ஒரு விரிவான உதவித் தொகுப்பை வழங்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உதவித் தொகுப்பை எவ்வாறு சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இலங்கை முன்னெப்போதையும் விட வலிமையுடன் மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்தப் பயணத்திலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திலும், இந்தியா எப்போதும் இலங்கையின் பக்கபலமாக இருக்கும்.

மேதகு ஜனாதிபதி அவர்களே, எனது உயரிய மரியாதையை ஏற்றுக்கொள்வீர்களாக.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்