இந்தியாவில் விட மிகப்பெரிய எதிர்பார்ப்பு! 23 வருஷத்துக்கு பின் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வரும் டாடா கார்

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, டாடா சியரா கார், வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய அவதாரத்தில், மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள டாடா சியரா காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய சியரா காருக்கு முன்பதிவுகள் (Bookings) தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 70 ஆயிரம் பேர் புக்கிங் செய்து விட்டனர். அத்துடன் இன்னும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், டாடா சியரா காரை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனவே பழைய மாடலை போலவே, புதிய மாடலும், இந்திய சாலைகளை ஆட்சி செய்ய போகிறது என்பது உறுதி.

Tata Sierra Interior

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் ஆகும். அதாவது பெட்ரோல், டீசல் இன்ஜின் வெர்ஷன். இதை தொடர்ந்து கூடிய விரைவில் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கார்வாலே தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், வரும் 2026ம் ஆண்டில் (அடுத்த ஆண்டு) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், டாடா சியரா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டியுள்ளது.

Tata Sierra Side Design

ஆரம்பத்தில் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு வரும் எனவும், அதை தொடர்ந்துதான் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அது அப்படியே தலைகீழாக நடக்கிறது. அதாவது முதலில் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது.

Himalayan 450 ManaBlack Walkaround 🔥 | Royal Enfield-ல இதுதான் Dark Adventure! | Tamil Walkaround

டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் டிசைனை (Design) பொறுத்தவரையில், கிட்டத்தட்ட அதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஐசி இன்ஜின் வெர்ஷனிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் டேஷ்போர்டில் 3 திரைகள் (12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதே 12.3 இன்ச் அளவில் முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை மற்றும் 10.25 அளவில் இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்) ஆகியவை எல்லாம், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படலாம்.

இவை எல்லாம் தவிர, லெவல் 2 அடாஸ் (ADAS – Advanced Driver Assistance Systems), அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நிறுவனம் இந்தியாவில் 6 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV), டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) ஆகும்.

இந்த வரிசையில் ஏழாவது எலெக்ட்ரிக் காராக, டாடா சியரா இவி விற்பனைக்கு வரவுள்ளது. டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 55 kWh மற்றும் 45 kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், டாடா சியரா எலெக்ட்ரிக் காரின் வருகை, விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு