சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுவர்களினதும் தேவைகளுக்கு ஏற்ப தனித்தனி நடவடிக்கைகள் – கல்வியமைச்சின் செயலாளர்

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரே மாதிரியான தீர்வை வழங்காமல்பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுவர்களினதும்  சூழலுக்கு ஏற்ப தனித்தனி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் நாலககளுவேவ இதனை தெரிவித்துள்ளார்..
கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்புகள்:
காப்பீடு மற்றும் நிதி உதவி: பெற்றோரை இழந்த அல்லது வாழ்வாதாரத்தை இழந்த மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படும்.
தற்காலிக தங்குமிடம்: வீடுகளை இழந்த மாணவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை பள்ளி விடுதிகளில் ) தற்காலிக தங்குமிட வசதிகள் செய்து தரப்படும்.
பாதிப்பு மதிப்பீடு: யுனிசெஃப் ( நிறுவனத்துடன் இணைந்து கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட அறிக்கை ஜனவரி 5 2026-க்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் நடவடிக்கைகள்:
பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரினி அமரசூரியஇ பதுளை மாவட்டத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீகாகியுல தேசிய பாடசாலை மற்றும் கேடவத்த யோதா உல்பத முன்பள்ளி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

அவர் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:

சீரமைப்பு மற்றும் இடமாற்றம்: விரைவில் சரிசெய்யக்கூடிய பள்ளிகளை உடனடியாகப் புதுப்பிக்கவும்இ அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றவும் உத்தரவிட்டார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: பாதிப்புகளால் இயங்க முடியாத முன்பள்ளிகளைக் கண்டறிந்து அங்குள்ள ஆசிரியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பசறை யூரி தமிழ் ஆரம்பப் பாடசாலை குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்