மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சீர்செய்து ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு உதவிகளை நாடுகிறது இலங்கை

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சீர்செய்து ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு உதவிகளை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மண் சரிவுக்கு உள்ளான 1,241 இடங்களில்,நிலைமையை சீர்செய்து ஸ்திரதன்மையை ஏற்ப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஊடாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சரிவு ஏற்பட்ட இடங்களை நிலைப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே இந்த நாடுகளின் தொழில்நுட்ப உதவியை நாடுவதன் நோக்கம் என்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆசிறி கருணாவர்த்தன ‘ தெரிவித்தார்.

ஏற்கனவே இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் இலங்கைக்கு வருகை தந்து முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலையக ரயில் பாதை நிலைமை: மலையக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்கள் தமது நிறுவன விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டு, அது தொடர்பான முதற்கட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ரயில் பாதையை எவ்வாறு மீண்டும் அமைப்பது என்பது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரயில்வே திணைக்களம் இணைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ரயில் பாதையின் எந்தப் பகுதியையும் சரி செய்ய முடியாது என்று கூறப்படவில்லை எனவும், தற்போதுள்ள ரயில் பாதையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மாவட்டங்கள்: மண் சரிவு ஏற்பட்ட 1,241 இடங்களில் இருந்து எவ்வளவு குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என்பது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நிறுவனத்தைச் சேர்ந்த 45 குழுக்கள் கண்டி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய ஆறு மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் வெளிப்படுத்தினார்.

“மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சில வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. இன்னும் சில வீடுகள் அழியவில்லை என்றாலும், அவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இவை அனைத்தையும் குறித்து அந்த 45 குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்