அழகான வாழ்க்கையுடன் கூடிய வளமான நகரத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதியை ஒருபோதும் கைவிட மாட்டோம்” – கொழும்பு மேயர்

கொழும்பு மாநகர சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பு 2025 டிசம்பர் 31 அன்று நடைபெறும் என்றும் இந்த வரவுசெலவுதிட்டம் உறுப்பினர்கள் மாநகர நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் வெளிப்படையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேயர் விராய் கேலி பல்தசார் தெரிவித்துள்ளார்

இது குறித்து முகநூல் பதிவொன்றை இட்டுள்ள மேயர் இரண்டாம் கட்ட வாசிப்பிற்கு முன்னதாக வரவுசெலவுதிட்ட தயாரிப்பு முறையை பொதுமக்களுக்கு விளக்குவது தனது பொறுப்பு எனத் தெரிவித்தார். ஒரு சபையின் வரவு செலவுத் திட்டம் என்பது வெறும் எண்களின் தொகுப்பு மட்டுமல்ல அது கடந்த கால செயல்பாடு முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டிற்கான திட்டங்களைப் பிரதிபலிக்கும் ஆவணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவுசெலவுதிட்ட தயாரிப்பில் உள்ள சவால்கள்:
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை செயல்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழ் வரவுசெலவுதிட்டத்தை
தயாரிப்பதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் கீழ் தயாரிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் இது செயல்முறையைச் சிக்கலாக்கியதாகவும் அவர் கூறினார். இந்தச் சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒருவரவுசெலவுதிட்டத்தை
முன்வைப்பதே அனைத்து உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

தயாரிப்பு நிலைகள்: புதிய சபை நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஒருவரவுசெலவுதிட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கின.

ஜூலை 2025: 16 மாநகர நிறுவனங்களுக்கும் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு மேயர் அறிவுறுத்தினார்.

ஆகஸ்ட் 2025: முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எனப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் தமது யோசனைகளை முன்வைக்க அழைக்கப்பட்டனர்.

ஊழியர் பங்களிப்பு: மாநகர சபை ஊழியர்களும் எழுத்துப்பூர்வமான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டனர். இது சபைக்குள் கட்டியெழுப்பப்படும் புதிய அரசியல் கலாசாரத்தின் குறிப்பிடத்தக்க சாதனை என மேயர் விவரித்தார்.

நிதி ஆய்வு: நவம்பர் 2025 வரை முன்மொழிவுகளின் நிதி சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டுத் திருத்தப்பட்டன.

ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடல்கள்:வரவுசெலவுதிட்ட வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர் அது 23 நிலையியற் குழுக்களில் விவாதிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் பங்கேற்றனர்.

பொதுமக்கள் ஆய்வு: சட்டப்படி வரவுசெலவுதிட்டத்தை ஆய்வு செய்யப் பொதுமக்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக மூன்று மொழிகளிலும் முன்னணி பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. பொது நூலகம் மற்றும் மாநகரப் பொருளாளர் அலுவலகத்தில் இதன் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

இறுதி கட்டம்: பொதுமக்களின் கருத்துக்களுக்குப் பிறகு நிதி தொடர்பான இரண்டு குழுக்களில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு மதிப்புகள் சரிசெய்யப்பட்டு பிழைகள் திருத்தப்பட்டன. இந்தத் திருத்தங்களுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை மேயர் டிசம்பர் 22 அன்று பொதுச் சபையில் சமர்ப்பித்தார்.

கொழும்பு மக்களுக்கு வளமான நகரம் மற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்குவதே சபையின் இலட்சியம் என மேயர் விராய் கேலி பல்தசார் மீண்டும் உறுதிப்படுத்தினார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்