இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புகளின் மாநாடு- இன்னமும் திகதி தீர்மானிக்கப்படவில்லை

உலக வங்கிசூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்துசர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்படவுள்ளதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர்ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான வெளிநாட்டு நிவாரண உதவி (வழங்கல்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு  இந்த மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி மாநாட்டிற்கான காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும்இ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

உலக வங்கியின் மதிப்பீடு
உலக வங்கியின் ‘அறிக்கையின்படி டிட்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட நேரடி பௌதீக சேதம் 4.1 பில்லியன் அமெரிக்கடொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகையானது கட்டிடங்கள் விவசாயம் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை உள்ளடக்கியது.

3. இடமாற்றம் மற்றும் இடர் நிலைப் பகுதிகள்
பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அமைச்சர் கூறுகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  சில அபாயகரமான பகுதிகளை வெளியேற்றுவதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். ஏனைய பகுதிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கேகாலை மாவட்டத்தில் சுமார் 1450 இடங்கள் அபாயகரமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 1400 இடங்கள் குறித்த விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?