கொழும்பு துறைமுக நகரத்தின் பிரதான உருவாக்குநரான CHEC போர்ட் சிட்டி கொழும்பு (Pvt) Ltd, அதன் செயற்பாடுகள் திட்டங்கள் புதிய யுகத்திற்குள் நுழையும் வேளையில், இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மேலதிக உட்கட்டமைப்பு மைல்கற்களை எட்டுவதற்கும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
“2014-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, கொழும்பு துறைமுக நகரத்தின் மூலோபாய பார்வை எப்போதும் இலங்கை சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டது,” என்று CHEC போர்ட் சிட்டி கொழும்பு (Pvt) Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சியோங் ஹோங்ஃபெங் (Xiong Hongfeng) தெரிவித்தார். “இந்த 269 ஹெக்டேர் மூலோபாய முயற்சியின் அளவும் முக்கியத்துவமும், தெற்காசியாவில் ஒரு வலிமையான பிராந்திய சக்தியாக மாறும் இலங்கையின் ஆற்றல் மீதான எமது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.”

தேசிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாக, கொழும்பு துறைமுக நகரம் பல சவாலான சூழ்நிலைகளிலும் குறிப்பிடத்தக்க நெகிழ்ச்சியையும் சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, அரசியல் மாற்றங்கள், 2019உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய இடையூறு மற்றும் 2022 பொருளாதார நெருக்கடி என பல ஏற்ற இறக்கங்களை இத்திட்டம் சந்தித்துள்ளது. இந்தத் தடைகளையும் மீறி, தெற்காசியாவில் உலகத்தரம் வாய்ந்த முதலீட்டு இலக்காக மாறுவதற்கான தனது மூலோபாய இலக்கில் இத்திட்டம் உறுதியாக உள்ளது.
மேலும், 1998 முதல் இலங்கையில் முக்கிய கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்து வரும் சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) ஒரு துணை நிறுவனமாக, இந்த உருவாக்குநர் நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளனர்.
2019-இல் நில மீட்புப் பணிகள் நிறைவடைந்ததிலிருந்து, கொழும்பு துறைமுக நகரம் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த பிராந்திய முதலீட்டு மையமாகத் திகழ்வதை உறுதிப்படுத்தும் பல மைல்கற்களை எட்டியுள்ளது. இதில் 2021-இல் இலங்கை நாடாளுமன்றத்தில் இருதரப்பு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் முக்கியமானதாகும். இது சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஒழுங்குமுறை சூழலை நிறுவியுள்ளது. இதன் விளைவாக, தற்போது 146 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இங்கு நவீன சேவை ஏற்றுமதிகளில் ஈடுபட்டு வருகின்றன.
2025 அக்டோபர் 17 அன்று, ஒரு முக்கிய உட்கட்டமைப்பு மைல்கல்லாக, கொழும்பு துறைமுக நகரம் நீர், மின்சாரம் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு இணைப்புகளை கொழும்பு பிரதான நகரத்தின் கட்டமைப்புடன் வெற்றிகரமாக இணைத்ததை அறிவித்தது. இது இத்திட்டம் முழு அளவிலான வணிகச் செயல்பாடுகளுக்குத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.
தெற்காசியாவின் முன்னோடி தீர்வை அற்ற (Duty-Free) சில்லறை விற்பனை மையமான (The Mall), 2024 செப்டம்பரில் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், வணிக மையம் (The Business Centre) 2024 மார்ச்சில் அடிக்கல் நாட்டப்பட்டு, 2025 மே மாத இறுதியில் இருந்து அலுவலக இடங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
சொகுசு மெரினா மேம்பாடு (Luxury Marina Development), LOLC குழுமத்தின் பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட் பிஎல்சி மூலம் 120 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் 2025 ஜனவரி 10 அன்று தொடங்கப்பட்டது. 200 படகுகளை நிறுத்தும் வசதி கொண்ட இத்திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
