உலகெங்கிலும் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்கள் தங்களின் ஆளுமையை அதிகளவில் வெளிப்படுத்தி வந்த போதிலும், அவர்களின் பங்களிப்புகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் ஹரிணி 

முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகள் (Gendered power hierarchies) மூலம் கட்டமைக்கப்பட்ட ரீதியில்தொடர்ந்தும் பேணப்படுகின்றது

22 ஜனவரி 2026

உலகெங்கிலும் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்கள் தங்களின் ஆளுமையை அதிகளவில் வெளிப்படுத்தி வந்த போதிலும், அவர்களின் பங்களிப்புகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்று இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள் (Unpaid care work), முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறைகளில் அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகள் (Gendered power hierarchies) மூலம் கட்டமைக்கப்பட்ட ரீதியில்தொடர்ந்தும் பேணப்படுகின்றது . இந்தத் தடைகளைத் தகர்ப்பது என்பது, பெண்கள் நம்பிக்கையுடன் தலைமை தாங்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றுவதாகும்,” என்று பிரதமர் அமரசூரிய தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்த கூட்டத்தின் ஒரு அங்கமாக, “மாறிவரும் உலகளாவிய ஒழுங்கிற்கு தலைமை தாங்கும் பெண்கள்” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்டக் கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

அவரது உரையின் முக்கிய பகுதிகள்:

“அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது என்பது தற்செயலான ஒன்றல்ல; அது அதிகாரப் படிநிலைகள் மூலம் திட்டமிட்டுத் தக்கவைக்கப்படுகிறது. தலைமைத்துவத்தில் இருக்கும் பெண்கள், குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் மீது ஏவப்படும் துன்புறுத்தல்கள், நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் (Character assassination) மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டல் போன்றவை, தகுதியுள்ள பெண்களை அரசியலில் இருந்து பின்வாங்கச் செய்கின்றன. இது ஏற்கனவே வேரூன்றியுள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகளை (Patriarchal structures) மேலும் வலுப்படுத்துகிறது.”

இந்தத் தடைகளை அகற்றுவது என்பது பெண்களுக்கு வெறும் ‘பாதுகாப்பு’ வழங்குவது பற்றியது மட்டுமல்ல, மாறாக பெண்கள் தன்னாதிக்கம், அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தங்கள் தலைமைத்துவத்தைச் செயல்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்க நிறுவனங்களை மறுசீரமைப்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

“அரசியல் அர்ப்பணிப்பும் மக்களின் மன உறுதியும் இணையும்போது எத்தகைய மாற்றங்கள் சாத்தியம் என்பதற்கு இலங்கையே ஒரு சான்று. எமது தற்போதைய உள்ளடக்கிய அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாக 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தொலைநோக்குப் பார்வையைத் தாண்டி, உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறைமையை நோக்கிய மாற்றத்தை உணர்த்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

தனது உரையின் இறுதியில், தலைமைத்துவம் என்பது ஏற்கனவே இருக்கும் இருக்கைகளில் அமர்வது மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைப்பையே (Systems) மறுசீரமைப்பதாகும் என்று அவர் தெரிவித்தார். பெண்ணிய மற்றும் குறுக்குவெட்டுத் தலைமைத்துவத்திற்கான (Feminist, intersectional leadership) இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திய அவர், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில் பெண்கள் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமல்லாமல், அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்