வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 2025 இல் 8.1 பில்லியன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர் – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

கடந்த ஆண்டில் (2025) வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்:

“நாட்டின் வரலாற்றில் ஒரே ஆண்டில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய அதிகூடிய தொகை இதுவாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 879 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளது. அந்தத் தொகையுடன் சேர்த்து, 2025 ஆம் ஆண்டின் மொத்த வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் 8.1 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் இதில் 22.8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை பதிவான அதிகூடிய பெறுமதியை எட்டியுள்ளதோடு, 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையையும் இது கடந்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளிக்கு பின்னர் கிடைத்த ஏனைய கொடுப்பனவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.”
என தெரிவித்தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல