யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை (SFHQ-J) அகற்றும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இது தொடர்பாக சமூகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக பரப்பப்படும் இத்தகைய வதந்திகள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இதனை அமைச்சு வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.