கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை-தந்தையின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவர்

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது தந்தையின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட 53 வயதான சயிப் அல்-இஸ்லாமின் மரணத்தை, அவரது அரசியல் குழுவின் தலைவர் செவ்வாயன்று உறுதிப்படுத்தியதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜின்டான் (Zintan) நகரில் உள்ள அவரது இல்லத்தில் “நான்கு பேர் கொண்ட கமாண்டோ” குழுவினால் இந்த படுகொலை நடத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அதேவேளை, இதற்கு மாறான ஒரு தகவலை அவரது சகோதரி லிபியத் தொலைக்காட்சியிடம் பகிர்ந்துள்ளார். அவர் அல்ஜீரியாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகே இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னணி மற்றும் அரசியல் வாழ்க்கை:

1969 முதல் 2011-இல் போராட்டங்கள் மூலம் பதவியிறக்கப்பட்டு கொல்லப்படும் வரை லிபியாவை ஆட்சி செய்த முஅம்மர் கடாபிக்கு அடுத்தபடியாக, அந்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அஞ்சப்பட்ட நபராக சயிப் அல்-இஸ்லாம் நீண்டகாலமாகப் பார்க்கப்பட்டார்.

1972-இல் பிறந்த இவர், 2000-ஆம் ஆண்டிலிருந்து கடாபி ஆட்சி வீழ்ச்சியடையும் வரை மேற்கத்திய நாடுகளுடன் லிபியா உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது தந்தை அகற்றப்பட்ட பிறகு, அரசுக்கு எதிரான போராட்டங்களை மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியதில் முக்கிய பங்காற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சயிப் அல்-இஸ்லாம், ஜின்டான் நகரில் ஒரு போட்டிப் படையினரால் (Militia) கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

2011-இல் எதிர்க்கட்சிப் போராட்டங்களை ஒடுக்கியதில் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் பங்கிற்காக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவரை விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விரும்பியது. 2015-ஆம் ஆண்டில், ஐநா ஆதரவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரிப்போலி நீதிமன்றம், போராட்டங்களை ஒடுக்கியதற்காக அவருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் கிழக்கே டோப்ருக் (Tobruk) நகரில் உள்ள படையினரால் ஒரு பொது மன்னிப்புச் சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது.

தனது தந்தை ஆட்சியில் இருந்தபோது, அரசாங்கத்தில் எந்த அதிகாரப்பூர்வ பதவியும் வகிக்காத போதிலும், கொள்கைகளை வகுப்பதிலும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும் இவர் முன்னிலை வகித்தார். குறிப்பாக, அவரது தந்தை அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை இவரே முன்னின்று நடத்தினார்.

இத்தகைய உடன்படிக்கைகள் மூலம் வட ஆப்பிரிக்க நாடான லிபியா மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டன. இதனால் சிலர் இவரை ஒரு சீர்திருத்தவாதியாகவும், மாறிவரும் லிபியாவின் ஏற்றுக்கொள்ளத்தக்க முகமாகவும் கருதினர். தனது தந்தையிடமிருந்து அதிகாரத்தை வாரிசாகப் பெற விரும்புவதை எப்போதும் மறுத்து வந்த அவர், “அதிகாரம் என்பது வாரிசாகப் பெறுவதற்கு ஒரு பண்ணை நிலம் அல்ல” என்று கூறிவந்தார். இருப்பினும், 2021-ஆம் ஆண்டில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார், ஆனால் அந்தத் தேர்தல் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு