பசுமைப் பாதுகாப்புக் கவசங்களை மீட்டெடுத்தல்: சமூகப் பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டல் தாவரப் பரப்பை மீளுருவாக்கம் செய்தல்

unhabitat

 

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் உள்ளூர் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதிலும் கண்டல் காடுகள் (Mangroves) மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நாயாறில், Nayaru Lagoon இவை புயல்களுக்கு எதிரான இயற்கைத் தடுப்புகளாகவும், கடற்கரை அரிப்பைக் குறைக்கும் அரண்களாகவும், மீன் மற்றும் ஏனைய நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க நிலங்களாகவும் விளங்குகின்றன.

இருப்பினும், பல ஆண்டுகால மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக இந்த உயிர்நாடிச் சூழலமைப்புகள் பலவீனமடைந்துள்ளன. இது இப்பகுதியை காலநிலை மாற்ற அபாயங்களுக்கு ஆளாக்கியுள்ளதுடன், மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்மறையாகப் பாதித்துள்ளது.

இலங்கைக்கான யுஎன்-ஹபிற்றாட் (UN-Habitat) நிறுவனம், சுற்றாடல் அமைச்சு, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுடன் இணைந்து,  இரண்டு ஹெக்டேயர் பரப்பளவில்Nayaru Lagoon கண்டல் தாவரங்களை மீள நடும் பணியை தற்போது முன்னெடுத்து வருகின்றது. ‘அடாப்டேஷன் ஃபண்ட்’ (Adaptation Fund) நிதியுதவியுடன், “இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாறுபாடுகளுக்கான மீள்திறனை கட்டியெழுப்புதல்” எனும் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

2025 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், சமூகத்தால் நிர்வகிக்கப்படும் ஐந்து கண்டல் நாற்றுமேடைகள் நிறுவப்பட்டுள்ளன. எதிர்வரும் 16 மாத காலப்பகுதிக்குள் 50,000 கண்டல் நாற்றுகள் நடப்படவுள்ளன. இந்த மீளுருவாக்கத் திட்டம் அறிவியல் பூர்வமான மற்றும் இடத்திற்கு ஏற்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளது. மண்ணின் உப்புத்தன்மை மற்றும் தன்மை குறித்த அறிவியல் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே கண்டல் தாவர இனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த மீளுருவாக்கத் திட்டம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. கனகசுந்தரம் யுவரஞ்சினி கூறுகையில்: “கண்டல் காடுகளை மீட்டெடுப்பது எமது மாவட்டம் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள உதவுவதுடன், உள்ளூர் மீனவ சமூகங்களின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்” என்றார்.

யுஎன்-ஹபிற்றாட் நிறுவனத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகம், வனத் திணைக்களம், கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் திணைக்களம் மற்றும் உள்ளூர் சமூக அடிப்படையிலான அமைப்புகள் (CBOs) இத்திட்டத்தில் முக்கிய பங்காளர்களாக உள்ளன. இதில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது – 11-க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டல் நாற்றுமேடை மற்றும் மீளுருவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாற்றுமேடைகளை அமைத்தல், தாவர இனங்களைத் தெரிவு செய்தல் மற்றும் நடுகை நுட்பங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வழிகாட்டல்களை வழங்குகின்றனர். அதேவேளை, 20 சமூக உறுப்பினர்கள் அன்றாடப் பணிகளை நிர்வகிக்கின்றனர். அவர்கள் நாற்றுகளின் வளர்ச்சியைக் கண்காணித்தல், இளம் தாவரங்களை கால்நடைகளின் மேய்ச்சல் மற்றும் ஏனைய இடையூறுகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நாற்றுகள் தேவையான உயரத்தை எட்டியதும் அவற்றை மீள நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இத்தகைய நேரடிப் பங்களிப்பு அணுகுமுறை உள்ளூர் திறனை மேம்படுத்துவதுடன் திட்டத்தின் நீடித்த தன்மையையும் உறுதி செய்கிறது.

செம்மலை கிழக்கு கிராம நிலதாரி பிரிவைச் சேர்ந்த நாயாறு மீனவர் சங்கத்தின் உறுப்பினர் திருமதி. சந்திரபாலா செல்வி கூறுகையில்: “கண்டல் நாற்றுமேடைத் திட்டத்தில் எமது பங்களிப்பு, எமது ஏரியைப் பாதுகாப்பதோடு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் உதவுகிறது. நாம் நடும் ஒவ்வொரு நாற்றும் எமது சமூகத்தையும் எமது சூழலையும் பலப்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார்.

அடாப்டேஷன் ஃபண்ட் வழங்கிய 2 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் மூலம் நிதியளிக்கப்படும் இத்திட்டம், 2023 முதல் 2027 வரை அமுல்படுத்தப்படுகிறது. காலநிலை மாற்றத்திற்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய வாழ்வாதாரங்களை ஊக்குவிப்பதன் மூலமும், தகவமைப்புத் திறனை அதிகரிப்பதன் மூலமும், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட சமூகங்கள் காலநிலை மாற்ற பாதிப்புகளைச் சிறப்பாக எதிர்கொள்ளவும், நீண்டகால பாதிப்புகளைக் குறைக்கவும் இத்திட்டம் ஆதரவளிக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்