கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் பிரதம பொறியியலாளராக எந்திரி. க. கருணாநிதி அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் புதிய பிரதம பொறியியலாளராக எந்திரி. கனகசிங்கம் கருணாநிதி அவர்கள் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளராக கடமையாற்றி பின்னர் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
நீர்வள முகாமைத்துவம்,நீர்ப்பாசனத் திட்டங்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவர்.
தனது பணிக்காலத்தில் பல கிராமப்புற நீர்பாசனத் திட்டங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு தனது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
குறிப்பாக நீரேந்தல் பகுதிகளின் சீரமைப்பு, வெள்ளப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளில் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் பல துறைகளுடன் ஒருங்கிணைந்து மாவட்ட மட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பினையும் வழங்கியிருந்தார்.