எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட “தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு” பதிலடியாக, தலிபா ன்களுக்கு எதிராக பாகிஸ்தான் ‘ஆபரேஷன் கசாப் லில்-ஹக்’ (Operation Ghazab lil-Haq) என்ற ஒப்பரேசன் கசாப் லில்-ஹக்’இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வியாழக்கிழமை மாலை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சித்ரால், கைபர், மொஹமண்ட், குர்ரம் மற்றும் பாஜூர் ஆகிய எல்லைப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் ஆப்கானிஸ்தான் தலிபா ன்கள் தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் இந்த மோதல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தலிபான் தரப்பில் 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர். .
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள தலிபான்களின் ஆயுதக் கிடங்கு ஒன்றை பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசி அழித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தாயகம் திரும்புவதற்காகக் காத்திருந்த ஆப்கானியக் குடும்பங்கள், தோர்ஹாம் எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, கைபர் பகுதியிலுள்ள லான்டி கோட்டல் தடுப்பு மையத்தில் மீண்டும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன,
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இப்போது “நேரடிப் போர்” (Open War) மூண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். தலைநகர் காபூலில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதோடு, எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை தொடர்ந்து வருகிறது.
பாதுகாப்பு அமைச்சரின் கடும் எச்சரிக்கை
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“எங்களது பொறுமை எல்லையைத் தாண்டிவிட்டது. இப்போது நமக்கும் (பாகிஸ்தான்) உங்களுக்கும் (தலிபான் அரசு) இடையே இது ஒரு நேரடிப் போர். ஆப்கானிஸ்தான் தனது மண்ணை பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் இடமாக மாற்றியுள்ளது.”
ஆப்கானிஸ்தான் அரசு இந்தியாவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகப் பயங்கரவாதக் குழுக்களைத் தூண்டிவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிக்கை
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
-
பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே விரும்புகிறது, ஆனால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும்போது எங்களது ஆயுதப் படைகள் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உறுதியுடன் எதிர்கொள்ளும்.
-
அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பு எண்ணங்களை நசுக்கும் முழுத் திறன் பாகிஸ்தான் இராணுவத்திற்கு உள்ளது.
-
ஒட்டுமொத்த தேசமும் இராணுவத்தின் பின்னால் ஒருமித்து நிற்கிறது.
