அத்துமீறும்இழுவை படகுகளால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது -பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மீனவர்கள்

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மீனவர்களுக்கான உயிர்காப்பு அங்கிகள் வழங்கும் நிகழ்வும், மீனவர்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும்  நடைபெற்றது.
​நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் 2 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16 கடற்தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 584 மீனவர்களுக்கு குறித்த உயிர்காப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
​அத்துடன் சமகாலத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
​குறிப்பாக, அத்துமீறிய இழுவைமடிப் படகுகளால்  அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உள்ளூர் மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதோடு நீண்டகாலச் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மீன்வளம் குறைந்து செல்லும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
​அத்துடன் கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட அதிநவீன LED மின் விளக்குகளைப் பயன்படுத்திக் கணவாய் பிடிக்கும் முறையினால், உள்ளூர் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயற்பாட்டால் கடல் வளம் சிதைக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் உள்ளூர் மீனவர்கள் கடலுக்குச் சென்று வெறும் கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினர்.
​மேலும், எல்லை தாண்டிய மீன்பிடியினாலும், கம்பம் கட்டும் முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனாலும் தேவையற்ற இடர்பாடுகளையும் அச்சுறுத்தல்களையும் தாம் எதிர்கொள்வதாகத் தெரிவித்ததோடு, இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டனர்.
​பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்