ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி, டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்குக் கிடைத்த நீதி மட்டுமல்ல, கமேனி மற்றும் அவரது இரத்தவெறி பிடித்த குண்டர் படையால் கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற அனைத்து சிறந்த அமெரிக்கர்களுக்கும், மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் கிடைத்த நீதியாகும்.
அவரால் எங்களது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து தப்பிக்க முடியவில்லை; இஸ்ரேலுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டதால், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது. ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்.
அங்குள்ள பல IRGC (புரட்சிகர காவல்படை), ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் இனி போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடமிருந்து பாதுகாப்பு (Immunity) கோருவதாகவும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நான் நேற்று இரவு கூறியது போல, ‘இப்போது அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும், ஆனால் தாமதித்தால் மரணம் மட்டுமே மிஞ்சும்!’
IRGC மற்றும் காவல்துறையினர் அமைதியான முறையில் ஈரானிய தேசபக்தர்களுடன் இணைந்து, இந்த நாட்டிற்குத் தகுதியான பெருமையை மீண்டும் கொண்டு வர ஒரு பிரிவாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். கமேனியின் மரணம் மட்டுமல்லாமல், அந்த நாடு ஒரே நாளில் பெருமளவில் அழிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டுள்ளதால், அந்தச் செயல்முறை விரைவில் தொடங்கும். இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் எங்களது இலக்கை அடையும் வரை, துல்லியமான மற்றும் பலத்த குண்டுவீச்சுகள் இந்த வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை தடையின்றித் தொடரும்!என டிரம்ப் தெரிவித்துள்ளார்.