கோன்சே ஹபீபியாசாத் (Ghoncheh Habibiazad) –, மூத்த செய்தியாளர், பிபிசி பெர்ஷியன்:
ஈரானின் உயரிய தலைவர் அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency), உயரிய தலைவரின் அலுவலகத்திலுள்ள ‘நம்பகமான வட்டாரங்களை’ மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது
மேலும், இந்தத் தாக்குதல்களில் கமேனியின் மருமகள்களில் ஒருவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதாக ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கமேனியின் மருமகன் மற்றும் மருமகள் கொல்லப்பட்டதாகப் பரவிய சில செய்திகள் பின்னர் மறுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஈரானின் உயர்மட்டத் தலைவர் கமேனியின் மரணம் குறித்து ஈரான் அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை.
