ஹார்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல்:  எண்ணெய் விலை உயரும் அபாயம்

BBC

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் குறைந்தது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

முக்கிய வர்த்தகப் பாதையான இதற்கு கிழக்கே பயணித்த ஒரு கப்பலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அருகே மற்றொரு கப்பலும் தாக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நடைபெறும் இந்த நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்ல வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

முடங்கிய கடல்வழி வர்த்தகம்:

இந்த மோதலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஏறக்குறைய ஸ்தம்பித்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நீரிணை “தற்போது நடைமுறையில் மூடப்பட்டுள்ளது” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காப்பீட்டுச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், சுமார் 150 க்கும் மேற்பட்ட எண்ணெய்  கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் விலை உயர்வு:

இந்தத் தடங்கல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% வரை உயர்ந்து, ஒரு பரல் 80டொலராக அதிகரித்துள்ளது. மோதல் நீடித்தால் இது 100 டொலரைத் தாண்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், விலை உயர்வைக் குறைக்க ‘ஒபெக்+’ (OPEC+) நாடுகள் தினசரி 206,000 பரல் கூடுதலாக உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்டுள்ளன, இருப்பினும் இது போதுமானதாக இருக்காது என்று அஞ்சப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான மேர்ஸ்க் (Maersk), தனது கப்பல்களை சூயஸ் கால்வாய் வழியாக அனுப்பாமல், ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக நீண்ட தூரம் சுற்றி அனுப்ப முடிவு செய்துள்ளது.

 

.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்