, “பெய்ரூட் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பயங்கரவாதிகளை” தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
“கூடுதலாக, தெற்கு லெபனானில் உள்ள ஒரு ஹிஸ்புல்லா மையத்தையும் ஐடிஎஃப் (IDF) தாக்கியுள்ளது” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் வலுவான கோட்டையான தஹியே (Dahiyeh) உட்பட, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து, மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக லெபனான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் அதி உயர் தலைவர்கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, “ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்” என்று ஹிஸ்புல்லா ஞாயிற்றுக்கிழமை முன்னதாக எச்சரித்திருந்தது.
இந்தக் கொலைக்கு “பழிவாங்கும் விதமாக” ஹைஃபாவிற்கு தெற்கே உள்ள இஸ்ரேலிய ராணுவ முகாம் மீது “ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் கூட்டங்களை” ஏவியதை அந்த அமைப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனான் முழுவதும் உள்ள 52 குடியிருப்புகளுக்கு இஸ்ரேல் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதுடன், ஹிஸ்புல்லாவை இலக்கு வைக்கும் திட்டங்களையும் உறுதிப்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, தாங்கள் இலக்குகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளன.
“இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை,” என்று
இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவர் எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.
“உங்கள் பாதுகாப்பிற்காக, நீங்கள் உடனடியாக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, கிராமங்களில் இருந்து குறைந்தது 1,000 மீட்டர் தொலைவில் உள்ள திறந்தவெளிகளுக்குச் செல்ல வேண்டும். ஹிஸ்புல்லா போராளிகள், வசதிகள் அல்லது போர் உபகரணங்களுக்கு அருகில் இருப்பவர்கள் எவராயினும் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்.”
லெபனான் அரசு ஊடகங்களின்படி, இதுவரை குறைந்தது நான்கு கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையினால் லெபனானில் பரவலாக மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல, இது ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துள்ளது.
நவம்பர் 2024 இல் அமெரிக்கா முன்னின்று நடத்திய போர்நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும், ஹிஸ்புல்லா விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும், ஹிஸ்புல்லா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.